சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் 2024.08.12 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பரமநயினார் இளைஞர் கழகத்தினால் மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













