மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் ந.சத்தியானந்த் அவர்களின் தலைமையில் (23) வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணிக்கு பிரதேச செயலக பிள்ளையார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் விசேட பூசையின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பஜனை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பக்தி பூர்வமாக இடம்பெற்ற இந் நிகழ்வின் இறுதியில் ஐந்து மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
பூசையின் இறுதியில் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், Covid - 19 நிலையினை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரே இம்முறை ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top